/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனைகளுக்கான கருவிகள் வழங்குவதில் தாமதம்
/
அரசு மருத்துவமனைகளுக்கான கருவிகள் வழங்குவதில் தாமதம்
அரசு மருத்துவமனைகளுக்கான கருவிகள் வழங்குவதில் தாமதம்
அரசு மருத்துவமனைகளுக்கான கருவிகள் வழங்குவதில் தாமதம்
ADDED : ஜன 03, 2024 10:43 PM
விருதுநகர்:தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் நவீன கருவிகளுக்கு முழு பணத்தை செலுத்தியும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கொள்முதல் செய்து வழங்காமல் தாமதம் செய்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு தேவையான பரிசோதனை உபகரணங்கள், சிகிச்சை அளிக்கக்கூடிய சாதனங்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கொள்முதல் செய்து வழங்குகிறது. அதற்குரிய தொகையை கவுன்சிலிடம் மருத்துவ மனை நிர்வாகங்கள் செலுத்தி விடுகின்றன.
தமிழகத்தில் 2018க்கு முன்பு வழங்கப்பட்ட மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யக்கூடிய மேமோகிராம் கருவிகள் கைகளால் இயக்கக்கூடியதாக இருந்தது.
தற்போது பல அரசு மருத்துவமனைகளில் தானியங்கி மேமோகிராம் கருவிகள் (சி.ஆர்.) வழங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. சில மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவில்லை.
மேலும் கைகளால் இயக்கக்கூடிய மேமோகிராம் கருவிகளுக்கு பிலிம் கிடைப்பதிலும் சிரமம் உள்ளது.
இதனால் சி.ஆர்., கருவிகள் வாங்க மருத்துவமனை நிர்வாகங்கள் முடிவு செய்தன. இதற்கான முழு தொகையும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் செலுத்தப்பட்டு விட்டது.
ஆனால் ஓராண்டு கடந்தும் இதுவரை கருவிகள் வழங்கப்படவில்லை. பிலிம் பிரச்னையால் பழைய மேமோகிராம் கருவிகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே முழு தொகையும் செலுத்திய மருத்துவமனைகளுக்கு உரிய கருவிகளை உடனடியாக வழங்க மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.