/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்னணு பண பரிவர்த்தனையில் இடு பொருட்கள் விநியோகம்
/
மின்னணு பண பரிவர்த்தனையில் இடு பொருட்கள் விநியோகம்
மின்னணு பண பரிவர்த்தனையில் இடு பொருட்கள் விநியோகம்
மின்னணு பண பரிவர்த்தனையில் இடு பொருட்கள் விநியோகம்
ADDED : அக் 24, 2024 04:38 AM
திருச்சுழி: திருச்சுழி பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் காயத்திரி தேவி செய்தி குறிப்பு: சம்பா மற்றும் ராபி பருவ பருவத்திற்கு தேவையான விதைகள், நுண்ணூட்ட கலவைகள், உயிர் உரங்கள் உள்ளிட்ட இரு பொருட்கள் ரெட்டியபட்டி வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இருப்பில் உள்ளது.
இவை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடு பொருட்களை ஏடிஎம்., கார்டு, கூகுள் பே உள்ளிட்ட பணம் இல்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் அரசு கணக்கில் செலுத்தி இடு பொருட்கள் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான கருவி அலுவலகத்தில் உள்ளது. விவசாயிகள் இடு பொருட்களுக்கான முழு தொகை அல்லது பங்களிப்புத்தொகை கருவி மூலம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என, அறிவிக்கிறார்.