/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் கடைகள் இடிப்பு பணி துவக்கம்
/
ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் கடைகள் இடிப்பு பணி துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் கடைகள் இடிப்பு பணி துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் கடைகள் இடிப்பு பணி துவக்கம்
ADDED : ஜூலை 17, 2025 12:21 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கிழக்கு பகுதியில் உள்ள கடைகளை இடிக்கும் பணி நேற்று முதல் துவங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு 50 ஆண்டுகளை கடந்த நிலையில் கட்டடங்கள் சேதமடைந்து வருவதால் அவற்றை இடித்து விட்டு புதிய கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாக தற்போது கிழக்கு பகுதியில் உள்ள கடைகளை இடித்து விட்டு புதிய கடைகளை ரூ.3.2 கோடியில் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது.
புதிய கடைகளை கட்ட வியாபாரிகள் தரப்பில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது பல கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கடைகளை காலி செய்து நகராட்சியிடம் சரண்டர் செய்த நிலையில் நேற்று முதல் பழைய கடைகளை இடிக்கும் பணி துவங்கியது.
இதனால் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்வதில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கட்டணமில்லா கழிப்பறையும் இடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கட்டண கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகினர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.