/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாநகராட்சி உருவாக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மாநகராட்சி உருவாக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 28, 2024 04:07 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சி உருவாக்கத்தை கண்டித்து இ. கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமை வகித்தார். தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் பழனி குமார் பேசினர். இதில் ஊரக கிராம உள்ளாட்சி அமைப்புகளை பாதுகாத்து தேவையான நிதிகளை தடையின்றி பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், கணேசமூர்த்தி ஒன்றிய கவுன்சிலர் பகத்சிங், நிர்வாக குழு உறுப்பினர் முத்துமாரி, வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.