ADDED : பிப் 17, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: நரிக்குடி மறையூரில் குடிநீர் குழாய் பழுதுக்கு ஊரக பொறியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் குருநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜகோபாலன் பேசினார். 11 ஒன்றிய அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.