ADDED : மார் 20, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம்வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் சுதந்திர கிளாரா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினர்.
மாவட்ட இணை செயலாளர் கண்ணன் முத்தரசு நன்றிக்கூறினார்.