ADDED : மே 31, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக் குழு சார்பில் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் காளிதாஸ், சமூக ஆர்வலர்கள் வீரப்பெருமாள், பீமாராவ் தலைமை வகித்தனர். இந்திய கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் சக்கணன், காங். எட்வர்ட், ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர் பாலமுருகன் பேசினர்.
நகராட்சிக்குட்பட்ட சமுதாயக்கூடங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், நாய்களுக்கு கருத்தடை ஊசி போடவும், பாதாளசாக்கடை திட்டத்தை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன.