
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ஊழியர், அதிகாரிகளின் பிரச்னைகளுக்கு செவிசாயக்க மறுக்கும் தலைமை பொதுமேலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., அனைத்து ஊழியர் சங்கங்கள் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொலை தொடர்பு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், பல்வேறு சங்க நிர்வாகிகளான விஜயராகவன், சண்முகராம், பார்த்தசாரதி, ராஜன் பேசினர்.