நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மூன்றாவது முறை பணிநீக்கம் செய்யப்பட்ட நாளை கருப்பு தினமாக அனுசரித்து கருப்பு பேட்ஜ் அணிந்து விருதுநகரில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் மல்லிகா, செயலாளர் முத்துப்பாண்டி, ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், இணை செயலாளர் கண்ணன் முத்தரசு பேசினர்.
* விருதுநகரில் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.

