நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: ஜன.24--: அருப்புக்கோட்டை ஸ்டேட் பாங்க் முன்பு அனைத்து வங்கி ஊழி யர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை வழங்க உத்தரவு கோரி, நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜா, கதிர்வேல், ராஜாசிம்மன் சிறப்புரையாற்றினர்.
ஸ்டேட் பேங்க், கனரா பேங்க், இந்தியன் பேங்க், ஐ.ஓ.பி., சவுத் இந்தியன் பேங்க், யூனியன் பாங்க் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்தனர்.

