ADDED : ஆக 13, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஆக. 14-
அருப்புக்கோட்டை ஸ்டேட் பேங்க் முன்பு அனைத்து வங்கிகளின் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக வங்கி ஊழியர்களின் அதிகப்படியான வேலை சுமை மற்றும் வங்கிகளின் ஆட்குறைப்பு காரணமாக பணிபுரியும் அலுவலர்களுக்கு பணிச்சுமையும், மனச்சோர்வும் ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் வாரத்தில் 5 நாட்கள் வேலை, 2 நாட்கள் விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு ஸ்டேட் பாங்க் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். கரூர் வைசியா பேங்க் அலுவலர் ராஜா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா அலுவல ராஜாசிம்மன், ஸ்டேட் பேங்க் கதிர்வேல் மற்றும் அனைத்து வங்கிகளின் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
--
