ADDED : செப் 17, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கைத்தறி தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யு., சார்பில் புதிய ரக சேலை உற்பத்திக்கு ஒன்றுக்கு ரூ.250 வழங்க வேண்டும், வேலையில்லா காலத்திற்கு நிவாரணமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட பொதுச்செயலாளர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மகாலட்சுமி, செயலாளர் தேவா, உதவி தலைவர் திருமலை உள்பட பலர் பங்கேற்றனர்.
