ADDED : செப் 19, 2026 07:05 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், செப். 20 –
விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தொ.மு.ச., பொதுச் செயலாளர் ராஜசெல்வம், மாவட்ட கவுன்சில் மாடசாமி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
