ADDED : நவ 24, 2026 05:38 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு மகாலட்சுமி பேசினார்.
இதில் மக்களுக்கு சாலை வசதியில்லை. ரேஷன் கடைக்கு அலைய வேண்டிய உள்ளது. குடியிருப்பு அருகே கழிவு நீர் தேங்கி தொற்று அபாயமும், அலைபேசி சிக்னல் இல்லை. கூடுதல் விலைக்கு வீடு விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
