/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அதிகரிக்கும் கொசுத்தொல்லையால் டெங்கு பரவ வாயப்பு: தேங்கும் மழைநீரை வெளியேற்றுவது அவசியம்
/
அதிகரிக்கும் கொசுத்தொல்லையால் டெங்கு பரவ வாயப்பு: தேங்கும் மழைநீரை வெளியேற்றுவது அவசியம்
அதிகரிக்கும் கொசுத்தொல்லையால் டெங்கு பரவ வாயப்பு: தேங்கும் மழைநீரை வெளியேற்றுவது அவசியம்
அதிகரிக்கும் கொசுத்தொல்லையால் டெங்கு பரவ வாயப்பு: தேங்கும் மழைநீரை வெளியேற்றுவது அவசியம்
ADDED : அக் 31, 2024 01:04 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் வடகிழக்கு பருவமழை துவங்கி சில நாட்களாக வெயில் அதிகரித்து வருவதால் இந்த மழைநீரானது காலிமனைகளில் தேங்கி வற்றாமல் உள்ளது. மேலும் தற்போதே மாலை நேரங்களில் மேகமூட்டமும், காலை நேரம் வெப்பச்சலனமும் வீசுவதால் இதில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க உள்ளாட்சிகளில் கொசு ஒழிப்பு பணிகளை துவங்குவதோடு, தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் தென்மேற்கு பருவ காலமான ஜூன், ஜூலை மாதங்களிலும் மாலை நேரம் மழை பெய்தது. ஆகஸ்ட் மாதத்திலும் மாலை நேர மழை பெய்தது. அக்டோபரில் வடகிழக்கு பருவ காலம் துவங்கி அவ்வப்போது மழை பெய்தாலும் சமீப நாட்களாக காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலையில் வெப்ப சலனமும், மாலையில் மழையும் பெய்து வருகிறது. சில நாட்களில் மாலையில் மழையும் இல்லை. இந்த தட்ப வெப்ப மாற்றத்தால் சளி, காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெறுவோர் அதிகம் உள்ளனர். இந்நிலையில் மாலை நேர மழையால் பல காலிமனைகளில் மழைநீரானது தேங்கி நிற்கிறது. இது வெப்பச்சலனத்தாலும், மந்தமான வானிலையாலும் வற்றுவதில்லை. மேலும் வளர்ந்து வரும் பகுதிகளில் மக்கள் காலிமனைகளில் தான் வீட்டின் கழிவை விடுவதால் கழிவுநீருடன், மழைநீர் தேங்குகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கும் போது தான் இதமான வானிலை காரணமாக மாலை நேரங்களில் கொசு உற்பத்தியாகும். ஆனால் செப்டம்பரிலே கொசுத்தொல்லை அதிகரித்தது. தற்போது இன்னும் அதிகரித்துள்ளது. ஆனால் நகர், ஊரகம் என இரு பகுதிகளிலும் கொசு ஒழிப்பு பணிகளான கொசு மருந்து புகை அடிப்பது, எண்ணெய் பந்துகள் வீசுவது போன்ற பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. நன்னீரில் தான் டெங்கு கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ளது. அதே போல் கழிவுநீரில் தான் மலேரியா, சிக்குன் குனியா கொசு உருவாக வாய்ப்புள்ளது. உள்ளாட்சிகளின் அலட்சியத்தால் மக்கள் அல்லல்படுகின்றனர்.
இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், மாவட்டத்தில் நிலையான வானிலை அல்லாது வெயில், மிதமான வெயில், மேகமூட்டம், மழை, இரவு குளிர் என மாறி மாறி ஒரே நாளில் இருப்பதால் காலிமனைகளில் தேங்கும் நீரானது வற்றாமலே உள்ளது. இதனால் டெங்கு பரவ வாய்ப்புள்ளது. மழைக்காலம் வந்தும் என உள்ளாட்சி நிர்வாகங்களும் கொசு ஒழிப்பு பணியில் மந்தம் காட்டுகின்றன, என்றனர்.
கொசு தொல்லையால் ஏற்படும் டெங்கு நோய் பரவாமல் தடுக்கஉள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். தேவையான கொசு ஒழிப்பு தடுப்பு மருந்துகளை சுகாதாரத்துறை மூலம் அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.