/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீிதானமின்றி டூவீலர் ஓட்டும் இளைஞர்களுக்கு ...பற்கள் பத்திரம்: மாதம் 47 பேருக்கு தாடை எலுமபு உடையுது

ADDED : டிச 04, 2025 04:44 AM

டூவீலர் ஓட்டுபவர்களுக்கு விபத்து ஏற்படும் போது முகத்தை பாதுகாப்பதற்காக கைகளை முன்பக்கம் கொண்டு செல்வர். ஆனால் மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் விபத்தில் சிக்கும் போது முகம் தரையோடு மோதி பற்கள், தாடை எலும்புகள் சேதமாவதோடு, உடலின் பல்வேறு பகுதிகளில் படுகாயங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வாகனத்தில் மெதுவாக சென்று விபத்துக்களை தவிர்க்க வேண்டும்.
இது போன்று விபத்து, அடிதடியால் பாதிக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்.
இது குறித்து பல் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் கூறியதாவது:
தாடை எலும்பு உடைந்திருந்தால் சி.டி., ஸ்கேன் எடுத்து பார்த்து முறிவு ஏற்பட்ட பகுதிக்கு தகுந்தவாறு அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யப்படுகிறது. விபத்துக்களில் பற்கள், தாடை உடைந்து இருந்தால் கம்பி கட்டி சரிசெய்கிறோம். வளைவுப் பட்டை சிகிச்சை, மேல்தாடை, கீழ்தாடை இணைப்பு சிகிச்சை ஆகியவை செய்யப் படுகிறது.
நவம்பர் மாதத்தில் மட்டும் 47 பேருக்கு தாடை எலும்பு பற்கள் சிகிச்சை, மருந்து, மாத்திரைகளால் சரி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் கீழ்தாடை எலும்பு அறுவை சிகிச்சை 7, முகத்தாடை எலும்பு அறுவை சிகிச்சை 4, மேல்தாடை அறுவை சிகிச்சை 1, பற்கள் சீரமைப்பு சிகிச்சை 1 ஆகியவை செய்யப்பட்டுள்ளது, என்றார்.