/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடியிருப்புகளுக்குள் தேங்கிய மழைநீர்: இரு கிராம மக்கள் சிரமம்
/
குடியிருப்புகளுக்குள் தேங்கிய மழைநீர்: இரு கிராம மக்கள் சிரமம்
குடியிருப்புகளுக்குள் தேங்கிய மழைநீர்: இரு கிராம மக்கள் சிரமம்
குடியிருப்புகளுக்குள் தேங்கிய மழைநீர்: இரு கிராம மக்கள் சிரமம்
ADDED : டிச 04, 2025 04:39 AM

நரிக்குடி: நரிக்குடி பகுதியில் பெய்த கனமழைக்கு ஓடைகள் ஆக்கிரமிப்பால் இரு கிராமங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் தேங்கியதால் வெளியேற முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. ஓடைகள் வழியாக கண்மாய், ஊருணி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு மழை நீர் செல்லும். நரிக்குடி, கண்டு கொண்டான் மாணிக்கம் கிராமத்தில் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
அத்துடன் என். முக்குளம் கண்மாய்க்கு மழை நீர் செல்ல அருப்புக்கோட்டை பார்த்திபனூர் ரோட்டின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில், அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழி இல்லை. ஓடைகளும் புதர் மண்டி கிடப்பதால், மழைநீர் வெளியேற வழி இன்றி இரு ஊர்களின் குடியிருப்புகளுக்குள் தேங்கியது.
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால் 2 நாட்களாக மக்கள் வெளியேற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்ல முடியாமல் தவித்தனர். வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. மேலும் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் வீடுகளுக்குள் புகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றினால் மட்டுமே குடியிருப்புகளுக்குள் மழை நீர் தேங்குவதை தடுக்க முடியும். தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

