/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காலிப்பணியிடங்களால் ஊரக வளர்ச்சித்துறை; பணிச்சுமையால் பரிதவிக்கும் ஊழியர்கள்
/
காலிப்பணியிடங்களால் ஊரக வளர்ச்சித்துறை; பணிச்சுமையால் பரிதவிக்கும் ஊழியர்கள்
காலிப்பணியிடங்களால் ஊரக வளர்ச்சித்துறை; பணிச்சுமையால் பரிதவிக்கும் ஊழியர்கள்
காலிப்பணியிடங்களால் ஊரக வளர்ச்சித்துறை; பணிச்சுமையால் பரிதவிக்கும் ஊழியர்கள்
ADDED : ஜூலை 18, 2024 04:50 AM
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் ஒன்றிய அலுவலகங்கள், முகமை அலுவலகம், மகளிர் திட்டம், மாவட்ட ஊராட்சி என அனைத்து வகை வளர்ச்சித்துறை அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அதிகஅளவில் உள்ளது.
குறிப்பாக 790 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது 568பேர் பணிபுரிகின்றனர்.222 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அருகே காலியாக உள்ள பணியிடத்திற்கான பொறுப்பையும் சேர்த்து பணியில் உள்ளவர்கள் பார்க்கின்றனர். அது வேறு வேறு மாதிரியான பணியாக இருந்தாலும் ஒரு நபரே பார்க்க வேண்டி உள்ளது. இதனால் ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சிகள் துறையினர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முழுவதும் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு பணிக்காக அலைக்கழிக்கப்பட்டனர். அதே போல் 'மக்களுடன் முதல்வர்' பணிக்காக அலைக்கழிக்கப்படுகின்றனர். தற்போது கனவு இல்ல திட்டத்திற்கும் ஊராட்சி தோறும் அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது.
இத்திட்டத்திற்கு போதிய பணியிடம் கோரி மனுவும் அளித்துள்ளனர். இவர்கள் தாலுகா தோறும் முகாம்களுக்கு செல்வதால் அலுவலக பணிகள் தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகின்றன. காலியிடங்களால் அலுவலர்கள் திணறுகின்றனர். மன உளைச்சலை அதிகஅளவில் சந்திக்கின்றனர். இது உளவியல்ரீதியாகவும்பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அரசின் எந்த ஒரு திட்டத்திற்கும் அதிகஅளவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தான் பயன்படுத்தப்படுகின்றனர். புதிய திட்டங்களை அறிவிக்கும் முன் அதற்கேற்றவாறு பணியிடங்கள்நிரப்பப்பட்டுள்ளதா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அறிவித்தும் பயனில்லாத சூழல் தான் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபாலன் கூறியதாவது:
கனவு இல்ல பயனாளிகள் தேர்வு குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை இறுதிப்படுத்துவது மிகவும் அவசியம்.
ஒவ்வொரு 500 வீடுகளுக்கும் வட்டார அளவில் தலைமையிடத்துதுணை அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர், கணினி உதவியாளர், உதவி பொறியாளர், பணி பார்வையாளர் என 5 பணியிடங்கள் வேண்டும்.
அதே போல் மாவட்ட அளவிலும் உதவி இயக்குனர் உட்பட 5 பணியிடங்கள் தேவையாக உள்ளது. பணிச்சுமையால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். உரிய நடவடிக்கை அவசியமாகிறது, என்றார்.