/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு வைப்பு நிதி, ஓய்வூதியம்

ADDED : ஜன 23, 2025 03:54 AM

விருதுநகர்: விருதுநகர் பொம்மையாபுரம் பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வருங்கால வைப்பு நிதி பலன்களை அதிகாரிகள் வழங்கினர்.
விருதுநகர் அருகே பொம்மையபுரத்தில் ஜன. 4ல் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் கண்ணன், வேல்முருகன், மீனாட்சி சுந்தரம், நாகராஜ், சிவகுமார், காமராஜ் ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.
அவர்களது குடும்பத்தினருக்கு வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு தொகை அவர்களது வங்கி கணக்கில் 10 நாளில் வரவு வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அவர்களது குடும்பத்துக்கு மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகள், வருங்கால வைப்பு நிதி பலன்களை மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் சுப்பிரமணி, உதவி ஆணையாளர்கள் சுரேஷ், ஆதர்ஷ், அபய் ஆகியோர் சிவகாசி மாவட்ட வைப்பு நிதி அலுவலகத்தில் வைத்து வழங்கினர்.
அமலாக்க அதிகாரிகள் சீனிவாசன், சதீஷ் குமார், ஈஸ்வரன், அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.