sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை

/

ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை

ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை

ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை


ADDED : செப் 24, 2025 02:48 AM

Google News

ADDED : செப் 24, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்:ஏழாவது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என சாத்துாரில் நடந்த சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

அவர் பேசியதாவது:

தி.மு.க. கூட்டணி உடைந்து விடாதா என ஏங்கி தமிழகத்துக்கு எதிராக பல்வேறு சதி திட்டங்களை தீட்டி பா.ஜ., செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக புதிய கல்விக் கொள்கை திட்டம், தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி உதவித்தொகை நிறுத்தம், இது போன்ற பல சதி செயல்களை செய்து வருகிறது இவற்றை முதல்வர் ஸ்டாலின் தனது இடது கையால் சமாளித்து வருகிறார்.

இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 2021ல் பா.ஜ., அடிமை கட்சியிடம் இருந்து தமிழகத்தை மீட்டோம். 2026ல் மீண்டும் அடிமை கட்சி ஆட்சி ஏற்பட்டு விடக் கூடாது. 7வது முறையாக தி.மு.க ஆட்சி அமைத்து தமிழகத்தை காப்போம்

தி.மு.க., வில் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி என மொத்தம் 25 அணிகள் உள்ளது. அதை விட அ.தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்அணி, தினகரன் அணி, சசிகலா அணி, தீபா அணி, தீபாவின் டிரைவர் அணி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அணி என இன்னும் பல அணிகள் உள்ளது.

சாத்துார் சட்டசபை தொகுதியில் கூட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஒரு அணி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் தலைமையில் மற்றொரு அணி செயல்படுகிறது. இரு நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமி என்பவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என்றும், இனி அ.தி.மு.க., எனது கட்டுப்பாட்டில் என தெரிவித்தார். இவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சென்று சந்தித்து வந்துள்ளார் என்றார்.

விருதுநகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உதயநிதி பேசியதாவது: தமிழகம் முழுவதும் நான்கரை ஆண்டுகளில் 19 லட்சம் பட்டாக்களை வழங்கியுள்ளோம். விடியல் பயண திட்டம் மூலம் 780 கோடி டிரிப் பயணங்கள் பெண்கள் சென்றுள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 2023 செப். 15 முதல் 2025 செப். வரை ஒரு கோடி 20 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுவரை ரூ.24 ஆயிரம் வழங்கியுள்ளார். விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம். அந்த முகாம்களில் 60 சதவீத கோரிக்கைகள் மகளிர் உரிமை தொகை கோரி தான் வந்துள்ளது. சில தளர்வுகள் அளித்துள்ளதால் ஓரிரு மாதங்களில் கூடுதல் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.

தமிழக வரலாற்றில் முதன் முறையாக மகளிர் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கி வருகிறோம். இந்தியாவிலே முன் மாதிரியான திட்டம் இது. விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும். அதை பத்திரமாக வைத்து பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படும், என்றார்.

ஆய்வில் 'தினமலர் நாளிதழ்'செய்திகளுக்கு முன்னுரிமை


விருதுநகரில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நாளிதழ்களில் வந்த செய்தியை கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். இதில் தினமலர் நாளிதழில் கடந்த ஒரு வாரம் வந்த செய்திகள் பற்றி கேட்டார். குறிப்பாக ரோடு, குடிநீர் வசதி தொடர்பான பிரச்னைகளை அடிக்கோடிட்டு கேட்டுள்ளார். மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து காலம் தாழ்த்தாமல் விரைந்து செய்ய அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
2023ல் நடந்த கூட்டத்தின் போதும் உதயநிதியின் ஆய்வு பாராட்டுக்குரியதாக பேசப்பட்டது. அதன் எதிரொலியாக நேற்று முன் தினத்தில் இருந்தே தினமலர் நாளிதழ் செய்திகளை அதிகாரிகள் கத்திரித்து வைத்து பதில் தயாரித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போதும் துல்லியமாக மக்கள் பிரச்னைகளை தினமலர் நாளிதழை சுட்டி காட்டி கேட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us