sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயபுத்துார் -- மதுரை ரயில் செங்கோட்டைக்கு நீட்டிக்கப்படுமா

/

கோயபுத்துார் -- மதுரை ரயில் செங்கோட்டைக்கு நீட்டிக்கப்படுமா

கோயபுத்துார் -- மதுரை ரயில் செங்கோட்டைக்கு நீட்டிக்கப்படுமா

கோயபுத்துார் -- மதுரை ரயில் செங்கோட்டைக்கு நீட்டிக்கப்படுமா


ADDED : செப் 24, 2025 02:46 AM

Google News

ADDED : செப் 24, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:கோவையில் இருந்து மதுரை வரை இயங்கும் ரயிலை ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையிலிருந்து தினமும் காலை 7:05 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு (ரயில் எண் 16722) மதியம் 12:10 மணிக்கு சென்றடைந்து, மறு மார்க்கத்தில் அங்கிருந்து தினமும் மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு இரவு 7:30 மணிக்கு மதுரை வந்தடையும் வகையில் (ரயில் எண்.16721) ஒரு ரயில் இயங்கி வருகிறது.

இந்த ரயிலை இரவு 8:00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன் கோவில், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு இயக்கினால் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் பயனடைவார்கள். மறு மார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து அதிகாலை 3:00 மணிக்கு புறப்பட்டு காலை 6:30 மணிக்கு மதுரை வந்தடைந்து, வழக்கம் போல் கோவைக்கு இயக்கினால் தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல் ரயில் சேவையும், வைகை எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் ரயில்களுக்கு இணைப்பு ரயில் வசதியும் கிடைக்கும். ரயில்வே துறைக்கும் வருவாய் அதிகரிக்கும்.

எனவே, கோவை- - மதுரை வழித்தடத்தில் இயங்கும் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுபயணிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us