/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : பிப் 22, 2024 12:19 AM
விருதுநகர் - நரிக்குடி மறையூரில் நிழற்குடையில் தண்ணீர் பீறிட்டதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்ய கோரி மாவட்டம் முழுவதும் ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
சிவகாசி ஒன்றிய அலுவலகத்தில் மாநில செயலாளர் புகழேந்தி, வெம்பக்கோட்டையில் மாவட்ட துணை தலைவர் கோபால், சாத்துாரில் கிளை நிலைய செயலாளர் தேஹேயு, ஸ்ரீவில்லிபுத்துாரில் கிளை தலைவர் தங்கமுனியாண்டி, வத்திராயிருப்பில் மாவட்ட தலைவர் ராஜகோபாலன், ராஜபாளையத்தில் கிளை செயலாளர் அமுதா, அருப்புக்கோட்டையில் மாவட்ட தணிக்கையாளர் ராஜாக்கனி, காரியாபட்டியில் கிளை செயலாளர் சீராளன், நரிக்குடியில் மாவட்ட செயலாளர் நேரு ஹரிதாஸ், திருச்சுழியில் துணை தலைவர் பத்மினி ஆகியோர் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
மூன்று நாள் போராட்டத்தில் முதல் நாள் போராட்டமாக அலுவலர்கள் அனைவரும் கையெழுத்திட்டு அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 432 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.