/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆத்திபட்டிக்கு நிதி ஒதுக்காததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு; ஊராட்சி தலைவர் குமுறல்
/
ஆத்திபட்டிக்கு நிதி ஒதுக்காததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு; ஊராட்சி தலைவர் குமுறல்
ஆத்திபட்டிக்கு நிதி ஒதுக்காததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு; ஊராட்சி தலைவர் குமுறல்
ஆத்திபட்டிக்கு நிதி ஒதுக்காததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு; ஊராட்சி தலைவர் குமுறல்
ADDED : நவ 30, 2024 05:54 AM
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி ஊராட்சிக்கு நிதி ஒதுக்காததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாக ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ஆத்திபட்டி ஊராட்சி . இதில் ஆத்திப்பட்டி, கட்ட கஞ்சம்பட்டி உள்ளடக்கியுள்ளது. ஊராட்சியில் ஜெயராம்நகர், பாண்டியன் நகர், பெத்தம்மாள் நகர், ஜெயம் கார்டன் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் உள்ளன.
ஆனால் போதுமான வளர்ச்சிப் பணிகள் செய்ய ஊராட்சிக்கு நிதி ஒதுக்குவது இல்லை. ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டி 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சிறிய அளவில் இருப்பதால் இதில் உறுப்பினர்களை வைத்து கூட்டம் நடத்தவோ அலுவலர்களுக்கான இடம் ஒதுக்கவோ முடியாத நிலையில் உள்ளது. அங்கன்வாடி கட்டிடம் கட்டி 30 ஆண்டுகள் ஆன நிலையில் அதை இடித்துவிட்டு புதியதாக கட்டித் தரப்படும் என ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் இடிக்கச் சொல்லி உத்தரவிட்டனர்.
இடிக்கப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கவில்லை. தற்போது அங்கன்வாடி மையம் நூலகத்தில் இயங்கி வருகிறது.
இது குறித்து ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி : ஆத்திப்பட்டி ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சி பணிகளுக்கு நிதி கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை. மாற்றுக் கட்சியாக இருப்பதால் எங்கள் ஊராட்சியை புறக்கணிக்கின்றனர். எங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு ஊராட்சிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. அரசு பாரபட்சமாக ஊராட்சிகளுக்கு நிதியை ஒதுக்குகிறது. ஆத்திப்பட்டிக்கு தேவையான வளர்ச்சி பணிகள் செய்ய அரசு நிதியை ஒதுக்க வேண்டும்.