தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சதுரகிரி மலை ஏறும் போது பக்தை இறப்பு

சதுரகிரி மலை ஏறும் போது பக்தை இறப்பு

சதுரகிரி மலை ஏறும் போது பக்தை இறப்பு


ADDED : அக் 07, 2025 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண், நெஞ்சு வலி காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், தென்கரை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியின் மனைவி மகா, 55. இவர், புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று தன் உறவினர்களுடன், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.

காலை 10:30 மணிக்கு கோவிலுக்கு செல்லும் வழியில் சின்ன பசுக்கடை ஏற்றம் என்ற இடத்தில் மலை ஏறும் போது, நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த அறநிலையத்துறையினர் மற்றும் வனத்துறையினர், அவரது உடலை அடிவாரத்திற்கு எடுத்து வந்தனர். பின், பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us