/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் பிரதோஷம் அமாவாசை வழிபாடு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

ADDED : அக் 29, 2024 04:33 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு இன்று (அக்.29) முதல் நவம்பர் 2 வரை ஐந்து நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் இன்று (அக். 29) பிரதோஷ வழிபாடு, அக். 31, நவ. 1-ல் அமாவாசை வழிபாடும் நடக்கிறது.
இதனை முன்னிட்டு இன்று முதல் நவ.. 2 வரை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதித்துள்ளதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு மலையேறும் வழிதடத்தில் உள்ள ஓடைகளில், தற்போது தண்ணீர் வரத்து உள்ள நிலையில், கனமழை பெய்தால் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.