/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக பஸ் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

ADDED : செப் 22, 2024 03:45 AM
காரியாபட்டி,: காரியாபட்டியில் இருந்து பெருங்குடி, அவனியாபுரம், திருப்பரங்குன்றம் வழியாக பெரியாருக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பகுதி முருக பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு 3 முறை, கார்த்திகை, தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட விசேஷ நாட்கள் என கோயிலுக்கு சென்று வருவர். காரியாபட்டி பகுதியில் இருந்து செல்லும் பக்தர்கள் பெரியார் பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கிருந்து திருப்பரங்குன்றம் பஸ் பிடித்து செல்ல வேண்டும். இதனால் பணம், நேரம் விரயமாவதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பல கி.மீ., சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
மதுரை டெப்போவிலிருந்து 30 பஸ்கள், காரியாபட்டி டெப்போவிலிருந்து 10க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் என தினமும் தலா 56 முறை இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்கள் அனைத்தும் பெருங்குடி, அவனியாபுரம், தெற்கு வாசல், பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்கிறது. இதில் ஒரு சில பஸ்களை குறிப்பிட்ட நேரத்திற்கு அவனியாபுரம், திருப்பரங்குன்றம் வழியாக இயக்கினால் பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு எளிதில் சென்று வர முடியும். பணம், நேரம் விரயமாவதை தடுக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றம் வழித்தடத்தில் தேவையான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.