/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முருகன் கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பக்தர்கள் அரோகரா கோஷம்
/
முருகன் கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பக்தர்கள் அரோகரா கோஷம்
முருகன் கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பக்தர்கள் அரோகரா கோஷம்
முருகன் கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பக்தர்கள் அரோகரா கோஷம்
ADDED : அக் 28, 2025 03:30 AM

விருதுநகர்: மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம் நடந்தது.
முருகன் கோயில்களில் அக். 21முதல் துவங்கிய கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை துவங்கினர். 6ம் நாளான நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலையில் யாக பூஜை, வேல் பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணி முதல் தேசபந்து மைதானத்தில் முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.
இதை தொடர்ந்து பானக பூஜை, சிறப்பு பூஜை மண்டபத்தில் இருந்து சூரன் தடம் பார்த்து நகர்வலம் வருதல், பின்னர் நைவேத்ய பூஜை உள்ளிட்டவை நடந்தது.
* வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் அக். 22ல் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. ஆறாம் நாளான நேற்று காலை பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், வேல் சுமந்து வெள்ளப் பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலுக்கு வந்தனர். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
மாலை 4:00 மணிக்கு சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் முத்தாலம்மன் திடலில் நடந்தது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் முருகப்பெருமான் வேலால் குத்தி சூரபத்மனை வதம் செய்தார். விழா ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினர் அறநிலையத்துறை யினர் செய்திருந்தனர்.
* ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று மாலை 6:30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் துவங்கியது. சண்முகர், சுப்பிரமணியர் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளினர். கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் சூரனை வதம் செய்தல் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

