/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெருமாள் கோயில் முன் பள்ளம் பக்தர்கள் சிரமம்
/
பெருமாள் கோயில் முன் பள்ளம் பக்தர்கள் சிரமம்
ADDED : அக் 19, 2025 09:35 PM
காரியாபட்டி: காரியாபட்டி சத்திரம் புளியங்குளத்தில் பெருமாள் கோயில் முன் தோண்டப்பட்ட பள்ளம், 3 மாதங் களாகியும் மூடாததால் பக்தர்கள் சிரமப் படுகின்றனர்.
காரியாபட்டி சத்திரம் புளியங்குளத்தில் பழமை யான பெருமாள் கோயில் உள்ளது. தினமும் பூஜைகள் நடைபெறும். விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறும் போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர்.
இந்நிலையில் கோயில் செல்லும் வழியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சீரமைக்க பள்ளம் தோண்டினர். குழாயை சீரமைத்து பின், பள்ளத்தை மூடாமல் விட்டனர். 3 மாதங்களாகியும் கிடப்பில் போட்டனர். மழைபெய்து வருவதால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
பள்ளம் இருப்பது தெரியாமல் சிறுவர்கள் உள்ளே விழும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் சுவாமியை ஊர்வலம் கொண்டு செல்ல முடியவில்லை. பக்தர்கள் தவறி விழு கின்றனர். சிலர் அவசகுனமாக கருதுகின்றனர்.
பலமுறை புகார் தெரிவித்தும் நட வடிக்கை இல்லை. மேலும் பலர் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சுவாமியை வீதி உலா கொண்டு செல்ல இடையூறாக இருக்கிறது. பள்ளத்தை மூட நட வடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.