/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சி பூங்காவில் திருடு போகும் உபகரணங்கள்
/
நகராட்சி பூங்காவில் திருடு போகும் உபகரணங்கள்
ADDED : அக் 19, 2025 09:35 PM

சாத்துார்: சாத்துார் மெஜூரா கோட்ஸ் காலனியில் உள்ள பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் திருட்டுப் போவதால் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
மெஜூரா கோட்ஸ் காலனியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்கா திறக்கப்பட்டு சில மாதங்களே ஆகும் நிலையில் இதில் பொருத்தப்பட்டுள்ள உப கரணங்கள் இரவுநேரத்தில் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகிறது.
பூங்காவில் அமைக்கப் பட்ட தெரு விளக்குகள் மாயமான நிலையில் தற்போது பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணமான ஊஞ்சலில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு சங்கிலியுடன் கூடிய இருக்கைகள் மாயமாகி உள்ளன.
இதே போன்று மற்ற உபகரணங்களும் திருடு போகும் அபாயம் உள்ள நிலையில் இந்தப் பகுதி யில் சிசிடிவி கேமரா அமைத்து பூங்காவில் உபகரணங்கள் திருட்டுப் போவதை தடுக்க வேண்டும்.
பூங்காவில் மீண்டும் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உப கரணங்களை பொறுத்திட வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.