/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : டிச 29, 2024 04:01 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மார்கழி மாத பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு தாணிப்பாறை மலையடிவாரத்தில் குவிந்திருந்த பக்தர்கள் நேற்று காலை 6: 40 மணி முதல் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தனமாகலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர்.
இதனை பக்தர்கள் தரிசித்தனர்.
வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
திருச்சுழி: திருச்சுழி திருமேனிநாதர் சாமி கோயிலில் மகா சனி பிரதோஷ விழா நடந்தது.
திருச்சுழி திருமேனி நாதர், துணை மாலையம்மன் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு வில்வமாலை, திராட்சை மாலைகள் அணிவிக்கப்பட்டது.
நந்தி பெருமானுக்கு பால்,சந்தனம், பன்னீர், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தது.
அதைத் தொடர்ந்து நந்திகேஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் நடந்தது.
திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.