/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் சிரமம்
/
நரிக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் சிரமம்
நரிக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் சிரமம்
நரிக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் சிரமம்
ADDED : பிப் 17, 2025 05:50 AM

நரிக்குடி : நரிக்குடி பகுதியில் ஏற்கனவே செயல்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நரிக்குடி பகுதியில் நெல் விவசாயம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடந்து வருகிறது. தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. விளைந்த நெல்லை விவசாயிகள் அலையாமல் அருகிலே நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுத்தது.
அதன்படி நரிக்குடி பகுதியில் சென்ற ஆண்டு நரிக்குடி, இருஞ்சிறை, கட்டனுார், உளுத்திமடை உட்பட 25 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. விவசாயிகள் அலைச்சல் இன்றி அந்தந்த பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வசதியாக இருந்தது. செலவு குறைந்தது. உடனே பணம் கிடைத்தது.
இந்த ஆண்டு விளைந்த நெல் அறுவடை தற்போது நடந்து வருகிறது. நரிக்குடி பகுதியில் அ.முக்குளத்தில் மட்டும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. மற்ற இடங்களில் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் ஏற்கனவே செயல்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையம் திறந்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் விவசாயிகள் நெல் மூடைகளை அடுக்கி வைத்தும், நெல்களை குவித்து வைத்தும் வருகின்றனர்.
இன்னும் திறக்காமல் காலதாமதமாவதால், திறக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. மழை பெய்தால் முற்றிலும் பாதிக்கப்படும் என்கிற அச்சம் உள்ளது. வெயிலுக்கு நெல்கள் காய்ந்து வருகின்றன.
எனவே சென்ற ஆண்டு செயல்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்ப்புடன் உள்ளனர்.