/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீரசோழனில் ஆக்கிரமிப்பால் சிரமம்
/
வீரசோழனில் ஆக்கிரமிப்பால் சிரமம்
ADDED : அக் 28, 2025 03:31 AM
நரிக்குடி: வீரசோழனில் பஜாரில் ஆக்கிரமிப்பால், அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நரிக்குடி வீரசோழனை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. பல்வேறு தேவைகளுக்கும், வாரந்தோறும் நடைபெறும் சந்தை, பத்திரப்பதிவு, பல்வேறு ஊர்களுக்கு செல்ல பஸ் ஏற என தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஜாரில் பல்வேறு கடை வைத்திருப்பவர்கள் ரோடு வரை செட் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். ஆட்டோ, ஸ்டாண்ட், வேன் ஸ்டாண்ட் என ரோட்டோரத்தில் நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். அபிராமம், கமுதி உள்ளிட்ட ஊர்களுக்கு பஜாரை கடந்து ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி உள்ளதால் பஜார் பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரு வாகனங்கள் விலகிச் செல்ல முடியவில்லை. பயன்பாடற்ற பொருட்களை ரோட்டோரத்தில் போட்டு வைத்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். கடைக்காரர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. எளிதில் கடந்து செல்ல, பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

