/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தோண்டப்பட்ட ரோடுகள், சேதமான வாறுகால்கள்
/
தோண்டப்பட்ட ரோடுகள், சேதமான வாறுகால்கள்
ADDED : ஆக 30, 2025 11:51 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியில் தெருக்களில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமலும், வாறுகால் சேதமடைந்து கழிவுநீர் தேங்கி இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 16 வது வார்டை சேர்ந்தது திருநகரம் பகுதி. இதில் 10 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மலையரசன் கோயில் தென் வடல் தெருவில் குடிநீர் பகிர்மான குழாய் உடைந்ததை சரி செய்வதற்காக பேவர் பிளாக் ரோட்டை தோண்டி விட்டு பணி முடிந்த பின் அப்படியே விட்டுள்ளனர். ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த தெரு வழியாகத்தான் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லுகின்றனர். இங்குள்ள ரேஷன் கடைக்கு சரக்குகள் கொண்டு வர முடியாமல் லாரி சிரமப்படுகின்றது. வயதானவர்கள் தடுக்கி விழுகின்றனர். ரோட்டை சமன்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென் வடல் தெருவில் ரூ.18 லட்சத்தில் வாறுகால் கட்டினர். தரமற்ற பணியால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வாறு காலை அமைத்தும் பயனில்லை. கழிவு நீர் தேங்கி சுகாதார கேடாக உள்ளது .வாறுகாலும் பெயர்ந்து விட்டது. நகராட்சி நிதியும் வீணானது. திருநகரம் பகுதியில் பெரிய கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகள் உள்ளது. இவை சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பிளாட் களாக மாறி உள்ளது. நகராட்சியும் வருவாய்த்துறையும் கண்டும் காணாமல் உள்ளனர். விருதுநகர் மெயின் ரோடு பாவாடை தோப்பு அருகில் உள்ள நூறு அடிக்கு மேல் உள்ள ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் தெருக்களுக்குள் வந்துவிடுகிறது. இந்தப் பகுதியிலுள்ள நீர்வழிப் பாதைகள் அனைத்தும் அடைபட்டு போய் உள்ளன ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளன. இவற்றை மீட்க நகராட்சி எந்தவித நடவடிக்கை எடுப்பதில்லை. நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் சுவை அற்றதாக இருக்கிறது தாமிரபரணி, வைகை இரண்டையும் கலந்து வழங்குவதால் தண்ணீர் சுவை மாறிவிட்டது. தென் வடல் தெருவின் கடைசி பகுதியில் குடிமகன்கள் குடித்துவிட்டு கும்மாளம் போடுகின்றனர். இந்த வழியாக செல்ல பெண்கள் பயப்படுகின்றனர். போலீசார் குடிமகன்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த ரோடு செண்பகரத்தினம், குடும்ப தலைவி: திருநகரம் தென் வடல் தெருவில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் சரி செய்வதற்காக ரோட்டை தூண்டிவிட்டு சமன் செய்யாமல் விட்டதால் நாங்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. முதியோர்கள் தடுமாறி விழுகின்றனர். வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை பள்ளி மாணவர்கள் சிரமப்பட்டு பள்ளிக்குச் செல்ல வேண்டி உள்ளது. தோண்டி 20 நாட்களுக்கு மேலாகியும் நகராட்சி சரி செய்யவில்லை.
பயனற்ற வாறுகால் கலைச்செல்வி, குடும்ப தலைவி: திருநகரம் பகுதி மெயின் தெருவில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட வாறுகால்கள் கழிவுநீர் வெளியேற முடியாமலும் ஆங்காங்கு பெயர்ந்து சேதமடைந்து விட்டது. இதனால் கழிவு நீர் தேங்கி சுகாதார கேள்வி ஏற்படுகிறது. லட்சக்கணக்கில் நிதி செலவழித்தும் மக்களுக்கு வாறுகால் பயன் படவில்லை.
கிடப்பில் பணிகள் தனலட்சுமி, குடும்பதலைவி: திருநகரம் பகுதியில் பாதாள சாக்கடைக்காக ஆங்காங்கு தோண்டி விட்டு சென்றுவிட்டனர். பணி முடிந்தவுடன் குடிநீர் குழாய் காக மீண்டும் தோண்டி தெருவை மேடும் பள்ளமும் ஆக்கிவிட்டனர். பணிகளை உடனுக்குடன் முடித்து மக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் ஓட்டை சமமாக செய்ய வேண்டும்.

