/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்பாட்டிற்கு வந்த டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு வாகனம்

ADDED : ஜன 26, 2025 04:41 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்ட விழிப்புணர்வு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் கிராமங்கள் தோறும் டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு ஏற்படுத்துவதற்காக சி.எஸ்.சி., அகாடமி மூலம் தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையை மேம்படுத்தி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
இதில் முதற்கட்டமாக 200 கிராமங்களில் டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு வாகனங்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு வாகனம் கடந்த ஒரு மாதமாக கலெக்டர் அலுவலக வளாகத்திலும், அருப்புக்கோட்டையிலும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் ஜன. 21ல் செய்தி வெளியானது. இதையடுத்து டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு வாகனம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.