/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2026 சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி சொல்கிறார் தினகரன்
/
2026 சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி சொல்கிறார் தினகரன்
2026 சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி சொல்கிறார் தினகரன்
2026 சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி சொல்கிறார் தினகரன்
ADDED : ஆக 18, 2025 01:50 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ''2026 சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது,'' என, ஸ்ரீவில்லிபுத்துாரில் அ.ம.மு.க., பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
அவர் கூறியதாவது: கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக தொகுதி வாரியாக சென்று நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வருகிறோம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பதற்கான பணியை பா.ஜ., செய்ய வேண்டும். அது தேர்தல் வெற்றிக்கு உதவி செய்யும் என்பது எல்லோரது கருத்து.
அவர் அ.ம.மு.க.,வுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வார். அவரை கூட்டணிக்குள் கொண்டு வருவது பா.ஜ., தலைவர்களின் வேலையாகும். அ.தி.மு.க.,வில் உள்ள பிரச்னைகளை உரியவர்கள் சரி செய்ய விட்டால் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டு வருகிறார். அமித்ஷா அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம்.
2024 தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்ற நோக்கில் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தோம்.
ஆனால் சட்டசபை தேர்தலில் முத்திரை பதிக்கும் வகையில் அ.ம.மு.க. செயல்பாடு இருக்கும். 2026 தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.