ADDED : ஜூலை 19, 2025 11:28 PM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இருந்து விருதுநகர் செல்லும் சூரம்பட்டி ரோடு சீரமைக்கப்பட்டது.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இருந்து சூரம்பட்டி வழியாக அனுப்பன்குளம், நாரணாபுரம், ஆலமரத்துப்பட்டி, செங்கமலப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள்கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு விருதுநகருக்கு சென்று வருகின்றனர்.
தவிர இப்பகுதியிலுள்ள பட்டாசு ஆலைகளுக்கும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டு குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.
மேலும் மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. எனவே சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாகசெங்கமலப்பட்டியிலிருந்து விருதுநகர் செல்லும் சூரம்பட்டி ரோடு சீரமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.