தினமலர் செய்தி எதிரொலி சேதமான தொட்டி இடித்து அகற்றம்
தினமலர் செய்தி எதிரொலி சேதமான தொட்டி இடித்து அகற்றம்
UPDATED : நவ 20, 2026 04:54 PM
ADDED : நவ 20, 2026 04:52 PM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் சேதமான மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் ஊராட்சி அலுவலகம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தொட்டி முற்றிலும் சேதமடைந்து துாண்கள் வெறும் கம்பிகளால் தாங்கி இருந்தது. ஒரு மாதம் முன்பு வரை பயன்பாட்டில் இருந்த இந்த தொட்டி தற்போது பயன்பாட்டில் இல்லை. இடிந்த தொட்டி அருகிலேயே ரேஷன் கடை செயல்படுகிறது. மேலும் சேதமடைந்த ரோட்டின் வழியாகத்தான் வாகனங்கள் பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர். எனவே சேதம் அடைந்த தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதமடைந்த தொட்டி இடித்து அகற்றப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
