/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தினமலர் செய்தியால் ஓடை துார்வாரப்பட்டது
/
தினமலர் செய்தியால் ஓடை துார்வாரப்பட்டது
ADDED : செப் 23, 2024 05:53 AM

சிவகாசி : சிவகாசி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு செல்கின்ற ஓடை அம்பேத்கர் மணி மண்டபம் வழியாக மீனம்பட்டி கண்மாய்க்கு செல்லும். இந்நிலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு செல்கின்ற ஓடையில் முழுவதுமாக பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு அடைபட்டிருந்தது.
இதனால் கழிவு நீர் ஒரே இடத்தில் குளம் போல் தேங்கிவிட்டது. இதில் கொசு உற்பத்தியாவதோடு, ஏற்படுகின்ற துர்நாற்றத்தினால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அருகில் உள்ள பள்ளி மாணவர்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மேயர் சங்கீதா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு ஓடை முழுமையாக துார்வாரப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.