தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஸ்ரீவி.,யில் இருந்து நேரடி பஸ்கள்

ஸ்ரீவி.,யில் இருந்து நேரடி பஸ்கள்

ஸ்ரீவி.,யில் இருந்து நேரடி பஸ்கள்


ADDED : அக் 19, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 06:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை முடிந்து இன்று மக்கள் வெளியூருக்கு செல்லும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சென்னை, கோவை, தேனிக்கு நேரடி பஸ்கள் இயக்க எம்.எல்.ஏ. கார்த்திக் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தினமும் மதுரை, தேனி, விருதுநகர், திருச்சி, கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கு தினமும் பயணித்து வருகின்றனர்.

ஆனால் இவர்கள் சிரமமின்றி பயணிக்க வசதியாக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டு செல்லும் வகையில் பஸ்கள் இயக்கப்படாததால் தென்காசி, ராஜபாளையத்திலிருந்து வரும் பஸ்களில் நின்று கொண்டே பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை முடிந்து இன்று மதிய முதல் நாளை காலை வரை ஏராளமான மக்கள் வெளியூர் பயணிக்க உள்ளனர்.

அவர்கள் சிரமமின்று பயணிக்க வசதியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் பஸ்கள் இயக்க தொகுதி எம்.எல்.ஏ.

கார்த்திக் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us