/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
13 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
/
13 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
ADDED : மே 31, 2025 12:33 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2024-2025 பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்வதற்காக 13 கிராமங்களில் நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.
ராஜபாளையம் சேத்துார், தேவதானம், முகவூர், கோவிலுார், மேலுார் துரைச்சாமியாபுரம், அயன்கொல்லங்கொண்டான். ஜமீன்நல்லமங்களம், மேட்டுப்பட்டி, வத்திராயிருப்பு கான்சாபுரம், தம்பிபட்டி, வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், காரியாபட்டி முஷ்டக்குறிச்சி ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்திறக்கப்பட உள்ளது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் இ.சி.எஸ்., மூலம் செலுத்தப்படும். எனவே மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயன் பெறலாம். நெல் கொள்முதல் தொடர்பாக தேவையான விபரங்களுக்கு 04562-252607ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.