/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வருவாய்த்துறையில் பணியிடங்களை கலைப்பதை கைவிட வேண்டும் நேரடி நியமன அலுவலர்கள் வலியுறுத்தல்

ADDED : டிச 09, 2024 05:04 AM
விருதுநகர்: ''வருவாய்த்துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்க வேண்டிய நிலையில் தற்போதுள்ள பணியிடங்களை கலைக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்,'' என, விருதுநகரில் தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சையது அபுதாகீர் வலியுறுத்தினார்.
மாநில செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் ராஜராம் பாண்டியன், நிறுவன பொதுச் செயலாளர் குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் தனலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில தலைவர் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2 தேர்வு மூலம் வருவாய்த்துறையில் நேரடி நியமனம் செய்யப்படும் ஆர்.ஐ.,க்களின் பெயரை தகுதிக்காண் துணை தாசில்தார் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தற்போது பல்வேறு முகாம்கள் மூலம் மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று சான்றிதழ்கள், பட்டா மாற்றம் தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.
இதில் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு குறுவட்டத்திற்கும் ஒரு மண்டல துணை தாசில்தார் நியமனம் செய்ய வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் பணிச்சுமையுடன் பணிபுரியும் நிலையில் ஒரு சில பணியிடங்களை கலைக்கும் நடவடிக்கையை வருவாய் நிர்வாக ஆணையரகம் கைவிட வேண்டும்.
பேரிடர் மேலாண்மை துறையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் கடந்தாண்டு கலைக்கப்பட்டுள்ளன. இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் மாவட்டங்களில் சூழலை சமாளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும் என்றார்.