/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாற்றுத்திறன் மதிப்பீட்டு முகாமில் டாக்டர்கள் வராததால் திணறல் முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்
/
மாற்றுத்திறன் மதிப்பீட்டு முகாமில் டாக்டர்கள் வராததால் திணறல் முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறன் மதிப்பீட்டு முகாமில் டாக்டர்கள் வராததால் திணறல் முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறன் மதிப்பீட்டு முகாமில் டாக்டர்கள் வராததால் திணறல் முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்
ADDED : நவ 28, 2024 04:54 AM

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த மாற்றுத்திறன் மதிப்பீட்டு முகாமில் போராட்டம் காரணமாக டாக்டர்கள் வராததால் நீண்ட நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புதன்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் நடக்கிறது.
காலிப்பணியிடங்களை நிரப்புவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்கள் உருவாக்குவது, விருப்ப ஓய்வு அறிவிப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவ. 25 முதல் வரும் முன் காப்போம் முகாம், மாற்றுத்திறனாளிகள் பரிசோதனை முகாம், மாநில, மாவட்ட அளவிலான அனைத்து கூட்டங்களை புறக்கணிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு போராட்டத்தில் டாக்டர்கள் பங்கேற்று வருகின்றனர். இதனால் நேற்று நடந்த மதிப்பீட்டு முகாமில் டாக்டர்கள் வரவில்லை.
இதையடுத்து காலை முதலே காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். சான்று, அட்டை வழங்க கோரி முற்றுகையிட்டனர்.அடுத்த வாரம் வாங்க வாருங்கள் என மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறிய நிலையில் ஆத்திரமடைந்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்டத் தலைவர் நடராஜன் கூறியதாவது: வாரந்தோறும் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று வழங்கும் முகாமில் பங்கேற்க காலை 7:00 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். டாக்டர்கள் ஸ்டிரைக்கால் சான்று ஏதும் வழங்கவில்லை. 200 மாற்றுத்திறனாளிகள் ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர். காலை முதல் காத்திருந்து 11:40 மணிக்கு அட்டையை அடுத்த வாரம் வாங்கி கொள்ளுங்கள் என்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே உடனடியாக மாற்றுத்திறனாளி அட்டையை வழங்க வேண்டும், என்றார்.
இதே போல் பள்ளிகள் அளவிலும் நடக்கும் மாற்றுத்திறன் முகாம்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. டாக்டர்கள் வராததால் பாதிப்பு உள்ளது.