/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கடிதம் எழுதி வைத்து மாற்றுத்திறனாளி தற்கொலை-- போலீசாரே காரணம் என கிராமத்தினர் முற்றுகை

ADDED : ஜன 08, 2025 01:15 AM

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனது சாவுக்கு போலீசார் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கிராமத்தினர் உடலை எடுக்க விடாமல் முற்றுகையிட்டனர்.
ராஜபாளையம் அருகே நக்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ் மகன் செல்வகுமார் 37.மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கைகளில் விரல்கள் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற்றார். இந்நிலையில் இவரது வீட்டில் விஷம் குடித்து இறந்த நிலையில் தற்கொலைக்கு காரணம் போலீஸ் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.
நேற்று கடிதத்தை கைப்பற்றி உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது ஊர் மக்கள் தடுத்து முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., ப்ரீத்தி தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
டி.எஸ்.பி., கூறியதாவது:
இவர் மீது ஏற்கனவே சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 14 வழக்குகள் உள்ளன. தொடர்ந்து இக்குற்றத்தில் ஈடுபட்டதால் இவரது டூவீலரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஊர் மக்களே மது விற்பனையை கட்டுப்படுத்த புகார் அனுப்பி வந்தனர். அதில் எடுத்த நடவடிக்கையால் இச்சம்பவம் நடந்துள்ளது. பிரச்னை குறித்து மக்களுக்கு விளக்கியுள்ளோம் என்றார்.