ADDED : மார் 27, 2025 06:06 AM
நரிக்குடி: நரிக்குடியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை இயற்கை எரிவாயு பைப் லைன்கள் பதித்துள்ளது.
மதுரை மாவட்டம் கப்பலூரில் இருந்து விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஆனைகுளம், ராமநாதபுரம் மாவட்டம் காணிக்கூர் வழியாக செல்கிறது.
எரிவாயு பைப் லைன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நரிக்குடி கண்டுகொண்டான்மாணிக்கம் கிராமத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த ஒத்திகை நடந்தது.
இயற்கை எரிவாயு பைப் லைன்களில் கசிவு ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்வது, உடனடியாக தகவல் தெரிவிப்பது குறித்து மதுரை மண்டல முதன்மை செயல் மேலாளர் மணிலா, மேலாளர் சுந்தர் விளக்கம் அளித்தனர்.
ஏற்பாடுகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் செயல் மேலாளர்கள் ப்ரித்வி, அகில் செய்திருந்தனர். திருச்சுழி டி.எஸ்.பி., பொன்னரசு, பி.டி.ஓ., வாசுகி, தீயணைப்பு நிலைய வீரர்கள், உட்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.