/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உலகளாவிய பாடத்திட்டம் குறித்த கலந்துரையாடல்
/
உலகளாவிய பாடத்திட்டம் குறித்த கலந்துரையாடல்
ADDED : ஜன 27, 2025 06:45 AM

சிவகாசி | ; சிவகாசி லயன்ஸ் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ் சிவகாசியின் முதல் சர்வதேச பள்ளியில் உலகளாவிய பாடத்திட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி இயக்குனர் அய்யன் அதிதீரன் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் பிரபாகரன் வரவேற்றார்.
சிவகாசி லயன்ஸ் இன்டர்நேஷனல் கல்வி நிறுவனங்கள் உலகளாவிய பாராட்டுகளை பெற்றுள்ள இன்டர்நேஷனல் பாக்கலோரியட் பாடத்திட்டத்தை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிந்தனை குறைந்த பாடத்திட்டத்தை மட்டுமே கற்பிக்காமல் அதைவிட உலகளாவிய பார்வையுடன் சிந்திக்க புதுமைகளை உருவாக்க மற்றும் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் திறன்களை உருவாக்க இந்நிகழ்ச்சி  நடத்தப்பட்டது.
மும்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளி தலைமை ஆலோசகர் நந்தகுமார், இன்டர்நேஷனல் பாக்கலோரியட் முதன்மை ஆண்டு திட்டம்,  பி.ஒய்.பி. முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார்.
தொடர்ந்து பெற்றோர்கள் பங்கேற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் விளக்கம் அளித்தார். பி.ஒய்.பி. ஒருங்கிணைப்பாளர்களின் மாதிரி வகுப்பறையின் செயல்பாடு,  பி.ஒய்.பி. நான்காம் வகுப்பு மாணவர்கள் தலைமை ஏற்று நடத்தும் தலைமை செயல் விளக்கம் நடந்தது. பள்ளி முதல்வர் லதா ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

