ADDED : ஜன 04, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி; மல்லாங்கிணர் சூரம்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது வீட்டருகே பிளாவடியான் வீடு உள்ளது. முத்துச்சாமி வீட்டின் முன் கற்களை அடுக்கி வைத்திருந்தார்.
பிளாவடியான் வீட்டிற்கு செல்ல சிரமமாக இருந்தது. அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிளாவடியான், ஜோதி, முத்துச்சாமி ஸ்ரீதேவி ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.