/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்வீஸ் ரோடுகளில் மேய்ச்சல் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
/
சர்வீஸ் ரோடுகளில் மேய்ச்சல் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
சர்வீஸ் ரோடுகளில் மேய்ச்சல் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
சர்வீஸ் ரோடுகளில் மேய்ச்சல் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
ADDED : பிப் 17, 2025 05:58 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பகுதிகளில் உள்ள சர்வீஸ் ரோடுகளில் கால்நடைகளை கும்பலாக மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை காந்தி நகர் வழியாக மதுரை -- துாத்துக்குடி நான்கு வழிச்சாலை செல்கிறது. இங்குள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடுகள் செல்கின்றன. மேலும் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக திருச்சுழி, நரிக்குடி, இராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல ரோடு உள்ளது. சர்வீஸ் ரோட்டின் வழியாக திருச்செந்தூர், துாத்துக்குடி செல்வதற்கும், மற்றொரு சர்வீஸ் ரோடு வழியாக மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. காந்திநகர் சந்திப்பு பகுதியில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த ரோடு வழியாக தினமும் ஆடுகள், மாடுகளை கூட்டமாக மேய்ச்சலுக்கு ஓட்டி செல்கின்றனர். நுாற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் காலை மாலை நேரங்களில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோட்டை கடக்கும் வரை வாகனங்கள் காத்திருப்பதால் வரிசை கட்டி நிற்க வேண்டி உள்ளது.
கால்நடைகளை போக்குவரத்து இல்லாத பகுதிகளில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அதன் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

