/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நடுவப்பட்டியில் சமுதாயக்கூடம் கட்ட நிதி ஒதுக்கியும் திருப்பி அனுப்பியதால் அதிருப்தி

ADDED : டிச 08, 2025 05:16 AM
சிவகாசி: சிவகாசி அருகே நடுவப்பட்டியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம் கட்டுவதற்காக ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கியும் திரும்ப அனுப்பப்பட்டதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி அருகே நடுவப்பட்டியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமுதாய கூடம் கட்ட ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சமுதாயக்கூடம் கட்ட இடம் இல்லை எனக் கூறி நிதி திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும் இப்பகுதியினர் விசேஷங்களை நடத்துவதற்கு அருகில் உள்ள ஊர்களில் இருக்கின்ற சமுதாயக்கூடத்தில் கட்டணம் செலுத்தி விசேஷங்களை நடத்த வேண்டி உள்ளது. எனவே நடுவப்பட்டியில் உடனடியாக சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்பகுதியினர் கூறுகையில், ஊரிலேயே சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அரசு இடம் உள்ளது. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதியை கட்டுவதற்கு இடம் இல்லை எனக் கூறி நிராகரித்து விட்டனர். எனவே உடனடியாக நிதி ஒதுக்கி சமுதாயக்கூடம் கட்ட வேண்டும். என்றனர்.