/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக.11ல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்
/
ஆக.11ல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்
ADDED : ஆக 07, 2025 11:16 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு சுகாதாரத்துறை சார்பில் ஆக. 11ல் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ளவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
பொதுவாக குழந்தைகளுக்கு குடற் புழுக்கள் ஏற்பட்டால் ஊட்டசத்து குறைபாடு, ரத்தச்சோகை, உடற்சோர்வு, உடல், அறிவுத்திறன் மேம்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.
நடப்பாண்டு ஒன்று முதல் இரண்டு வயதுடைய 7 ஆயிரம் குழந்தைகள், 2 முதல் 19 வயதுடைய 1.60 லட்சம் பேருக்கு என மொத்தம் ஒரு வயது முதல் 19 வயதுடைய 1.70 லட்சம் பேருக்கும், 20 முதல் 30 வயதுள்ள 5 லட்சம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய குடற்புழு நீக்க நாள் ஆக. 11ல் பள்ளிகள், கல்லுாரிகள், துணை, ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
இவற்றில் விடுபட்ட குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரைகள் ஆக. 18ல் வழங்கப்படவுள்ளது.