/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட ஜூனியர் சப்-ஜூனியர் கபடி போட்டி
/
மாவட்ட ஜூனியர் சப்-ஜூனியர் கபடி போட்டி
ADDED : ஜூலை 23, 2025 12:17 AM
ராஜபாளையம்; ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான ஜூனியர், சப்- ஜூனியர் கபடி போட்டிகளில் தளவாய்புரம் பள்ளி முதல் பரிசு வென்றுள்ளது.
ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் நினைவு விளையாட்டு மன்றம், விருதுநகர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் 3 நாட்கள் நடந்தது. 60 அணிகளை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மாவட்ட கபடி கழக செயலாளர் கனி முத்து குமரன் துவக்கினார்.
இறுதிப் போட்டிகளில் ஜூனியர், சப்- ஜூனியர் மாணவர் பிரிவில் முதல் பரிசை தளவாய்புரம் பூ.மு. மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், மாணவிகள் பிரிவில் மீனாட்சிபுரம் ஆர்.சி பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார் மங்காபுரம் பள்ளி முறையே முதலிடம் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஐ.டி.பி.ஐ வங்கி மேலாளர் கோடீஸ்வர ராவ் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை மாநில கபடி கழக துணை செயலாளர் சுப்ரமணிய ராஜா தலைமையில் பி.ஏ.சி.ஆர் விளையாட்டு கழக தலைவர் மணிகண்ட ராஜா, மாவட்ட கபடி கழக பொருளாளர் ராம் சிங் ராஜா செய்திருந்தனர்.